Posts

Showing posts from December, 2017

அரசு ஊழியர்கள் சம்பளத்தை கண்டு வாய் பிளக்கிறோம் .. ஆனால் அரசியல்வாதிகளின் ஐந்தாண்டு சொத்து குவிப்பை கண்டு பேச மறுக்கிறோம் ... 30 ஆண்டுகள் உழைத்து சம்பாதிக்கும் அரசு ஊழியர்கள் சம்பாதிக்கும் பணம் , ஐந்தாண்டு சம்பாதிக்கும் கவுன்சிலரின் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் குறைவு ... எந்த ஒரு அரசு அதிகாரியையும் நம்மால் கேள்வி கேட்க முடியும் ? ஆனால், எந்த ஒரு அரசியல்வாதியையும் கேள்வி கேட்க முடியுமா ? அவர்களாகவே மேடையில் ஊழலைப் பேசிக் கொள்வார்கள் ... அவர்களாகவே சமாதானம் செய்து கொள்வார்கள் ... ஆனால் நம்மை பேச விடமாட்டார்கள்... ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு ஊழியர்கள் ஏதோ ஒருவகையில் இணைந்து இருப்பார்கள் . ஆனால் நாம் அதை உணராமல் அரசு ஊழியர்களை கேவலமாக பேசுகிறோம். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எந்த தகுதியும் இல்லாமல் வரும் அரசியல்வாதிகளை நாம் கேள்வி கேட்பதில்லை . நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை . இன்று படிக்கும் குழந்தைகள் அனைவருமே அரசு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு படித்து வருகிறார்கள். எந்த குழந்தையுமே அரசியல்வாதி ஆவேன் என்று படிப்பதில்லை. நமது பார்வையில் நிறைய தவறுகளை வைத்திருக்கிறோம் . தவறு செய்யும் அரசியல்வாதிகளையும், தவறு செய்யும் பெரிய உயர் அதிகாரிகளையும் நாம் கண்டிக்காது இருப்பதால் இன்று ஊழல் மலிந்து கிடக்கிறது . ஊழல் இல்லாத பிரதமரும் ,முதல்வரும் இருந்தால் அரசியல் சீராகும் . ஊழல் செய்யாத ஐஏஎஸ், ஐபிஎஸ் நீதிபதிகள் ,முதல் நிலை அதிகாரிகள் சரியாக இருந்தால் அரசு இயந்திரம் சுத்தமாகும் . அதை விட்டுவிட்டு கடைநிலை ஊழியர் களையும் ,மத்திய தர ஊழியர்களையும் நாம் ஒருசேர விமர்சிப்பதும் தவறு ஆகும் . நமது வருங்கால தலைமுறைகளை நல்ல முறையில் வளர்ப்போம் . நல்ல வழிகாட்டுதலை கொடுப்போம்... சமூக அவலம் களைய புதியதொரு தீர்வை கண்டுபிடிப்போம்.... (சில நல்ல அரசியல்வாதிகளும் உண்டு... நான் இதில் அவர்களைப் பற்றி விமர்சிக்கவில்லை, வாழ்த்துகிறேன்.. பாராட்டுக்கள்..) வணக்கத்துடன் .... ( கருத்துக்கள் சரியெனில் ஷேர்(பகிரச்) செய்யுங்கள் நட்புகளே... )

முடக்கம் ஆக்கத்தை மறைக்கும்; வீக்கம் காயத்தை மறைக்கும்; கோபம் சாந்தத்தை மறைக்கும்; ஏகாந்தம் சுற்றத்தை மறைக்கும்; நரகம் சொர்க்கத்தை மறைக்கும்; பொய்மை மெய்மையை மறைக்கும்; தாழ்மை உரிமையை மறைக்கும்; ஏக்கம் தூக்கத்தை மறைக்கும்; துக்கம் சுகத்தை மறைக்கும்; ஏமாற்றம் நம்பிக்கையை மறைக்கும்; துணிவு மறைக்கும் எல்லாவற்றையும் குழி தோண்டி புதைக்கும்.. துணிவோடு இருங்கள்... வாழ்க்கையில் வெல்லுங்கள்.. நல்விடியல் வந்தனம்! Good morning friends