Skip to main content
அரசு ஊழியர்கள் சம்பளத்தை கண்டு வாய் பிளக்கிறோம் ..
ஆனால் அரசியல்வாதிகளின் ஐந்தாண்டு சொத்து குவிப்பை கண்டு பேச மறுக்கிறோம் ...
30 ஆண்டுகள் உழைத்து சம்பாதிக்கும் அரசு ஊழியர்கள் சம்பாதிக்கும் பணம் ,
ஐந்தாண்டு சம்பாதிக்கும் கவுன்சிலரின் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் குறைவு ...
எந்த ஒரு அரசு அதிகாரியையும் நம்மால் கேள்வி கேட்க முடியும் ?
ஆனால், எந்த ஒரு அரசியல்வாதியையும் கேள்வி கேட்க முடியுமா ?
அவர்களாகவே மேடையில் ஊழலைப் பேசிக் கொள்வார்கள் ...
அவர்களாகவே சமாதானம் செய்து கொள்வார்கள் ...
ஆனால் நம்மை பேச விடமாட்டார்கள்...
ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு ஊழியர்கள் ஏதோ ஒருவகையில் இணைந்து இருப்பார்கள் .
ஆனால் நாம் அதை உணராமல் அரசு ஊழியர்களை கேவலமாக பேசுகிறோம்.
ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எந்த தகுதியும் இல்லாமல் வரும் அரசியல்வாதிகளை நாம் கேள்வி கேட்பதில்லை .
நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை .
இன்று படிக்கும் குழந்தைகள் அனைவருமே அரசு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு படித்து வருகிறார்கள்.
எந்த குழந்தையுமே அரசியல்வாதி ஆவேன் என்று படிப்பதில்லை.
நமது பார்வையில் நிறைய தவறுகளை வைத்திருக்கிறோம் .
தவறு செய்யும் அரசியல்வாதிகளையும், தவறு செய்யும் பெரிய உயர் அதிகாரிகளையும் நாம் கண்டிக்காது இருப்பதால் இன்று ஊழல் மலிந்து கிடக்கிறது .
ஊழல் இல்லாத பிரதமரும் ,முதல்வரும் இருந்தால் அரசியல் சீராகும் .
ஊழல் செய்யாத ஐஏஎஸ், ஐபிஎஸ் நீதிபதிகள் ,முதல் நிலை அதிகாரிகள் சரியாக இருந்தால் அரசு இயந்திரம் சுத்தமாகும் .
அதை விட்டுவிட்டு கடைநிலை ஊழியர் களையும் ,மத்திய தர ஊழியர்களையும் நாம் ஒருசேர விமர்சிப்பதும் தவறு ஆகும் .
நமது வருங்கால தலைமுறைகளை நல்ல முறையில் வளர்ப்போம் .
நல்ல வழிகாட்டுதலை கொடுப்போம்...
சமூக அவலம் களைய புதியதொரு தீர்வை கண்டுபிடிப்போம்....
(சில நல்ல அரசியல்வாதிகளும் உண்டு...
நான் இதில் அவர்களைப் பற்றி விமர்சிக்கவில்லை, வாழ்த்துகிறேன்.. பாராட்டுக்கள்..)
வணக்கத்துடன் ....
( கருத்துக்கள் சரியெனில் ஷேர்(பகிரச்) செய்யுங்கள் நட்புகளே... )
Comments
Post a Comment